யார் இவர்கள்?!
இன்றைய தினம் புதியதாக சில நவீனமான கட்டைப்பஞ்சாயத்துக்கள் தொலைகாட்சிகளில் நடக்கின்றன. கிராமங்களில் நடப்பது போலவும், நீதிமன்றங்களில் வழக்கு விசாரிக்கபடுவது போலவும் இந்த நிகழ்ச்சிகளிகளில் அலசி ஆராயப்படுகின்றன. இவர்களுக்கு யார் இந்த அதிகாரங்கள் கொடுத்தது?
இந்த நிகழ்சிகளில் குறிப்பாக பிரள்காதல், காதலித்து கைவிடப்பட்டது, பலதார மணங்கள் போன்றவை தான் அதிகமாக விசாரிக்கப்படுகிறது. (அப்பொழுதான் மக்கள் பார்ப்பார்களாம், டி.ஆர்.பி. கூடுமாம்). இச்சமுதாய சீர்கேடுகளை, ஒரு வலிமை மிக்க ஊடகத்தில் விவாதித்து மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் என்ன நன்மை கிடைக்க போகிறது?
இந்த நிகழ்ச்சிகள் நேர் ஒளிபரப்பாக நடைபெறுவதாக சொல்லபடுகின்றன. ஆனால் இவை ஏற்கனவே பலதினங்கள் பதிவாக்கப்பட்டு, என்ன ஒளிபரப்பினால் மக்களால் பார்க்கப்படுமோ அவை மட்டுமே வெட்டி ஒட்டப்பட்டு வழங்கப்படுகிறது. ஒரு வீட்டுக்குள் அல்லது ஒரு கோர்ட்டிற்குள் விசாரிக்கப்பட வேண்டிய விசயங்கள் அருவருக்கத்தக்க வகையிலே அரங்கத்தில் அம்பலமாக்கபடுகின்றன.
நீதிமன்றகள் தானாக முன்வந்து இந்த நிகழ்ச்சிகளை தடை செய்யுமா?